அந்தரங்க வீடியோவை கணவனுக்கு அனுப்பிய முன்னாள் காதலன்! தாயும் மகளும் தற்கொலை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Pornography
Pornography

கணவருக்கு அந்தரங்க வீடியோ அனுப்பப்பட்டதால் மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் தாராப்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த சத்யம் என்ற நபர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஊர் ஊராக சுற்றியதுடன் பல நேரங்களில் உடலுறவில் இருந்துள்ளனர். இதனை சத்யம் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்ததால் அந்த பெண்ணின் தாய் அவரை மிரட்டி வேறு ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதன்பின் சத்யம் அந்த வீடியோவை காட்டி தன்னிடம் உடலுறவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

susaid
susaid

இதற்கு அந்த பெண் மறுக்கவே அந்த வீடியோக்களை அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அவர் அந்த பெண்ணை அவரின்தாய் வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளார்.

வீட்டிற்கு வந்த அந்த பெண்ணும் தாயும் அவமானத்தால் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளனர். அவர்களின் வீட்டின் கதவு புதன்கிழமை நெடுநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து கொண்டு பார்த்ததில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த அந்த பகுதி போலீசார் சத்யம்மை கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.