கணவர் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்கிறேன்: பிரபல நடிகை!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
priyamani - 2026

என் கணவர் சம்மத்தித்தால் உங்களை கல்யாணம் செய்துக்கொள்ள நான் தயார் என நடிகை பிரியாமணி பதிலளித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமான பிரியாமணி அமீரின் பருத்தி வீரன் படம் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார். அப்படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றும், அதன்பிறகு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் சினிமாவில் இருந்து விலகினார்.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை பிரியாமணி திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த பிரியாமணி, தனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்றும் ஆனால் அதற்கு முன் என் கணவரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சம்மதம் தெரிவித்தால் உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என செம கூலாக பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதில் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.