மதுரை சிந்தாமணி ஸ்ரீராஜகாளியம்மன் கோவிலில்… திருவிளக்கு பூஜை!

ஆன்மிகச் செய்திகள் பொது தகவல்கள் மதுரை
thiruvilakku poojai - 2026

மதுரை சிந்தாமணி ஸ்ரீராஜகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட சிந்தாமணி சின்ன அனுப்பானடி மேட்டுப் புஞ்சை பொது மக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளி அம்மன் திருக்கோவில் இரண்டாம் ஆண்டு மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உலக மக்கள் நன்மை வேண்டியும் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் நோய் நொடி இல்லாமல் வாழவும் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது.

இத்திருவிளக்கு பூஜையில்சுற்றுப்புற பகுதியில் உள்ள பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றிஅம்மனை தரிசனம் செய்தனர்.

திருவிளக்கு பூஜையை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராஜ காளி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராஜகாளி அம்மன் திருக் கோவில் விழாக் குழுவினர் மற்றும் பகுதி மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.