பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்; போதையில் பாதுகாவலர் மீது கார் ஏற்றும் கொடூரம்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
20181212 175516 - 2026

மதுரையில் தனியார் விடுதி பாதுகாவலரை மதுபோதையில் அதிவேகமாக மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு -பாதுகாவலருக்கு கால்கள் துண்டிப்பு

மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த விஜயகுமார் இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்,

இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் மது விருந்து நடைபெற்றுள்ளது அப்போது மது விருந்தில் கலந்துகொள்ள வந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் தேவநாதன் என்பவர் அதிகாலை 2 மணியளவில் போதை தலைக்கேறிய நிலையில் பாதுகாவலர் கதவை திறப்பதற்கு முன்பே அதிவேகமாக மோதியதில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு விஜயகுமார் தூக்கி வீசப்பட்டார்,

இந்த சம்பவத்தில் விஜயகுமாருக்கு இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்,

அருகில் இருந்தவர்கள் விஜயக்குமாரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,

இந்த நிலையில் மதுபோதையில் விஜயகுமார் மீது மோதும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது,

விபத்தை ஏற்படுத்திய தேவநாதன் என்பவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளது கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.