உங்களுக்காக.. உளுந்து வடகம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
ulunthu vadakam - 2026

உளுந்து வடகம்
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு. 250 கிராம்
சின்ன வெங்காயம்/ஒரு பெரிய படி 850 கிராம்
துவரம் பருப்பு. 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் 1/4 டேபிள் ஸ்பூன்
பாசிப்பருப்பு. 4 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை. 1 பிடி
குண்டு பூண்டு. 2
உப்பு தேவையான அளவு
சீரகம். 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
அனைத்து பருப்பு வகைகளையும் தனித்தனியே ஊற வைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை மற்றும் துவரம் பருப்பை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கிரைண்டரில் ஊறவைத்த உளுந்து, பாசிப்பருப்பு மற்றும் வெந்தியத்தை, தண்ணீர் சேர்க்காமல்,அரைத்த சின்ன வெங்காய விழுதை சிறிது சிறிதாக சேர்த்து உளுந்தை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். உளுந்து புசுபுசுவென்று வந்தவுடன், அதில் தேவைக்கேற்ப உப்பு,கருவேப்பிலை, பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் கிரைண்டரில் சுற்றி,மாவை உடனே வழித்து எடுத்து விடவும். கிள்ளி வைப்பதற்கு முன் சீரகத்தை கலந்து கொள்ளவும். வழித்த மாவை உடனே எடுத்து கிள்ளி வேண்டும். இல்லையெனில் உளுந்து நுரை அடங்கி விடும் வடகம் நன்றாக வராது. இந்த அளவு வடகத்திற்கு மூன்று பேர் சேர்ந்து கடகட என கிள்ளி வைக்கவும். ஒரே நாளில் இந்த வடகம் காய்ந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.