இத செஞ்சு பாருங்க.. ரவா வடகம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
rava vadakam - 2026

ரவா வடகம்
தேவையான பொருட்கள்
ரவை. 1 கப்
தண்ணீர். 8 கப்
பச்சை மிளகாய். 4
சீரகம். அரை டீஸ்பூன்
உப்பு. தேவைக்கேற்ப
பெருங்காயம். சிறிதளவு

செய்முறை

ஒரு கப் ரவைக்கு எட்டு கப் தண்ணீர் என அளந்து 8 கப் தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் ரவை தூவி கட்டியில்லாமல் கிளறி மினுமினுப்பாக வரும் வரை வேக வைக்கவும்.

தேவைக்கேற்ப உப்பு மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து வெந்த ரவையில் கொட்டி கிளறவும். அதில் சிறிது பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து கிளறவும்.

வெயில் அடிக்கும் இடத்தில் தரையில் ஒரு வேஷ்டி விரித்து ஒரு சிறிய குழிக்கரண்டி உபயோகித்து வட்ட வட்டமாக ஊற்றவும். நான்கு நாள் வெயிலில் காய வைத்து எடுக்கவும். மிதமான தீயில் எண்ணையை காயவைத்து காய்ந்த வடகத்தை பொரித்து எடுத்தால் சுவையான ரவை வரவும் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.