பயணங்களில் கால்கள் வீங்குகிறதா? என்ன செய்யலாம்?

Leg swelling - 2026

நீண்ட தூர பஸ் பிரயாணங்களின் போது கால்கள் வீங்கிவிடுகின்றன என்று சொன்னீர்கள். எனவே இரண்டு கால்களும் வீங்குகின்றன என்று அர்த்தமாகிறது. ஏனெனில் ஒரு கால் மட்டும் வீங்கினால் அதற்கான காரணங்களும் சிகிச்சையும் வேறுபடும்.

பொதுவாக பிரயாணங்களின் பின்னரான கால்வீக்கம் ஆபத்தானதல்ல. பஸ்சில் பிரயாணம் செல்லும் உங்களை விட அதிக நேரம் விமானப் பயணம் செய்து வருபவர்களின் கால்கள் மேலும் அதிகமாக வீங்குவதுண்டு.

பிரயாணத்தின் போதான இத்தகைய கால் வீக்கங்களுக்கு முக்கிய காரணம் கால்களை தரையில் வைத்தபடி நீண்ட நேரம் ஒரே இடத்தில் செயலற்று உட்கார்ந்து இருப்பதுதான்.

இவ்வாறு இருக்கும்போது கால்களுக்கு செல்லும் குருதியில் ஒரு பகுதி மேலே செல்லாமல் நாளங்களில் தேங்கி நிற்கும். இதனால் குருதியில் உள்ள நீரின் ஒரு பகுதி நாளத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள திசுக்களுக்குள் ஊடுருவும். இதுவே கால் வீக்கத்தைக் கொண்டு வருவதற்கான காரணமாகும்.

பொதுவாக கணுக்காலை அண்டிய பகுதிகளில் இது வெளிப்படையகத் தெரியும். ஆனால் இது நீண்ட பிரயாணம் செய்யும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்பதும் உண்மையே.

இரு கால்களும் வீங்குவதற்கு ஒருவர் உட்கொள்ளும் சில மாத்திரைகளும் காரணமாகலாம்.

நீங்கள் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரை உபயோகிக்கிறீர்களா. அவ்வாறு உபயோகிக்கவர்களுக்கு கால் வீக்கம் வருவதற்கான சாத்தியங்கள். உண்டு. அதே போல உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் நிபிடிப்பின், அமைலோடிபின் (Nifedepine, Amlodepine) போன்ற மாத்திரைகளுக்கும் கால் வீக்கம் வருவதுண்டு.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

புருபன் டைகுளோபெனிக் சோடியம், பைரொக்சிகாம் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளும் கால் வீக்கத்தைக் கொண்டுவரலாம். நீரிழிவு நோய்க்கு உபயோகிக்கும் பையோகிளிட்டசோன் மாத்திரைகளும் அவ்வாறு வீக்கத்திற்கு காரணமாகலாம். அதேபோல பிரட்டிசலோன் மாத்திரையும் காரணமாகலாம்.

மாத்திரைகளால் ஏற்படும் கால் வீக்கம் பிரயாணம் பண்ணினால்தான் வரும் என்றில்லை. சாதாரண நேரத்திலும் வரலாம். இருந்தபோதும் சிலருக்கு நீண்ட நேரம் பிரயாணம் செய்யும் போதுதூன் முதலில் வெளிப்படுவதுண்டு.

மருந்துகள்தான் உங்கள் கால் வீக்கத்திற்கு காரணமாயின் மருத்துவருடன் கலந்தாலோசித்து வேறு மருந்துகளை மாற்ற முடியுமா என்பதை தீர்மானியுங்கள். நீங்காளாக நிறுத்த வேண்டாம்.

சரி பிரயாணம் போதான இந்து கால் வீக்கம் ஏற்படாமல் தடுக்க நீங்கள் என்ன பாதுகாப்பு எடுக்க முடியும்.

ஒரேயடியாக உட்கார்ந்திருப்பதை தவிர்த்து ஓரிரு மணி ஒரு தடவை எழுந்து சிறிது தூரம் நடந்துவிட்டு மீண்டும் உட்காருங்கள். இது ஆகாய விமானத்தில் சாத்தியம் ஆனால் மக்கள் நிறைந்த பஸ்சில் முடியாத காரியம்

அவ்வாறெனில் நீங்கள் உட்கார்ந்தபடியே உங்கள் முழங்கால்களையும் கணுக்கால்களையும் சற்று மடித்து நீட்டி பயிற்சி கொடுத்தால் இரத்தம் தேங்கி நிற்காது. கால்களுக்கான குருதி சுற்றோட்டம் சீரடையும்.

சாக்கைத் தூக்கிப் போட்டது போல ஆசனத்தில் ஒரே மாதிரி உட்கார்ந்திருக்காது உங்கள் உடல் நிலையை இடையிடையே மாற்றி உட்காருங்கள்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

காலுக்குமேல் கால் போட்டுக் கொண்டிருப்பதை பிரயாணத்தின் போது தவிருங்கள்.

இறுக்கமான ஆடைகளை அணிவதையும் நீண்ட பிரயாணத்தின் போது தவிருங்கள்.

கால் வீக்கத்துடன் வலி இருந்தால் அல்லது ஒரு கால் மட்டும் வீங்குகிறது எனில் மருத்துவ ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும்.

தண்ணீர்: திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படுகிறது என்றாலும் தண்ணீர் குடித்தால் வீக்கம் குறையும். நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். போதியளவு தண்ணீர் குடிக்க தவறினால், உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட காரணமாக அமையும்.

ஐஸ் பேக், பேண்டேஜ்: காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம் அல்லது கம்ப்ரெஷன் பேண்டேஜ் அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்கலாம்.

கால் உயர்த்தி வைத்தல்: உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படி செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம்.

மது அருந்தக் கூடாது: மதுவானது உடலில் நீர் வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகவும். கல்லுப்பு: வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும். எலுமிச்சை

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

ஜூஸ்: உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் பருகலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கலாம். மக்னீசியம்: உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி மற்றும் அவகேடோ ஆகிய உணவுகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது.

உப்பை குறைக்கவும்: உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைக்கலாம். பாக்கெட் உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். கால் மசாஜ்: கால் வீக்கத்திற்கு நிவாரணம் தர மசாஜ் உதவும். தேங்கிய திரவத்தை அகலச் செய்து வீக்கத்தை குறைக்கும்.

பொட்டாசியம்: உயர் ரத்த அழுத்தம் மற்றும் திரவம் தேங்க பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். சக்கரைவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகிய உணவுகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

1 COMMENT

  1. வணக்கம், இக்கட்டுரையில் பல காரணங்களை குறிப்பிட்டிருந்தாலும் கடைசி மூன்று பத்திகளில் குறிப்பிட்டுள்ள காரணங்களே முக்கியமானவைகளாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories