3 நாள் விடுமுறை.. ஒரே நாளில் எகிறிய விற்பனை!

சற்றுமுன் தமிழகம்
tasmak
tasmak

தமிழக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

முன்னதாகவே இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டதால் குடிமகன்களும் திட்டமிட்டனர். 3 நாட்களுக்கு தேவையான மதுப்பாட்டில்களை வாங்கி குவிக்க ஆர்வம் காட்டினர்.

இதனால் நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

குறிப்பாக, ரூ.2 லட்சம் விற்பனை நடைபெற்ற கடைகளில் ரூ.5 லட்சம் வரையில் நேற்று விற்பனை நடைபெற்றதாக தெரிகிறது. மேலும் சாக்குப்பை, அட்டைபெட்டிகள் ஆகியவற்றை கொண்டுவந்து மதுபானங்களை குடிமகன்கள் அள்ளிச்சென்றனர்.

மேலும், நேற்று கிடைத்தால் போதும் என்று மதுபானங்களை குடிமகன்கள் வாங்கினர். ஒரேநாளில் தமிழகம் முழுவதும் ரூ.130 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.