கடைக்குள் புகுந்த விலங்கு.. அட்டகாசம்! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
Monitor lizard - 2026

தாய்லாந்தில் கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த உடும்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மாக் கிரேகர் மார்ஷல் என்ற பத்திரிகையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ க்ளிப் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் 7- லெவன் என்ற சூப்பர் மார்க்கெட்டின் ஷெல்ஃபில் பெரிய உடும்பு ஒன்று அங்கு அடுக்கி வைத்திருந்த பொருட்களை தள்ளிக்கொண்டு மேலே ஏறுகிறது.

மேலே உள்ள ஷெல்ஃபில் ஏறியபிறகு அங்கு சற்றுநேரம் ஓய்வெடுக்கிறது. வீடியோவில் பலரும் அலறும் சத்தம் கேட்கிறது.

இந்த வீடியோவை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். பலரும் இதற்கு நகைச்சுவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.