எனவே… இனி… வேண்டாம்! இது வேண்டவே வேண்டாம்!

Published:

NEET - 2026

நீட் தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை. இனி நீட் தேர்வு வேண்டாம்…..

மண வாழ்க்கையில் கசப்பு: கணவன் அல்லது மனைவி தற்கொலை.இனி யாருக்கும் திருமணம் வேண்டாம்….

தொழிலில் கடும் நஷ்டம்: குடும்பமே தற்கொலை.இனி யாருமே தொழில் செய்ய வேண்டாம்….

பணி செய்யும் இடத்தில் அதிருப்தி.ஊழியர் தற்கொலை.இனி யாரும் வேலைக்கு போக வேண்டாம்….

10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி:மாணவ மாணவிகள் தற்கொலை.இனி இந்த தேர்வுகளும் வேண்டாம்….

பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கும் போதே ட்ரைவர் மரணம்:இனி யாரும் பேருந்துகளை ஓட்ட வேண்டாம்….

வீட்டில் மின் கசிவு: பெண்மணி மரணம் — இனி யாரும் வீட்டில் கரண்ட் உபயோகப் படுத்தக்கூடாது….

ஹோட்டலில் சாப்பிட்டவருக்கு வாந்தி பேதி.இனி யாரும் ஹோட்டலில் சாப்பிட வேண்டாம்….

பைக் விபத்து:வாலிபர் மரணம்.இனி யாரும் பைக் ஓட்டக்கூடாது….

பத்தாயிரம் லஞ்சம். இன்ஸ்பெக்ட்டர் கைது.இனி யாரும் இன்ஸ்பெக்ட்டர் வேலை பார்க்கக்கூடாது….

தவறான சிகிச்சை. நோயாளி மரணம்.இனி யாருக்கும் சிகிச்சையளிக்கக்கூடாது….

  • சமூக வலைத்தள வைரல் பகிர்வு
ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img