குருவாயூரில் ஸ்ரீகிருஷ்ண வழிபாட்டுக்குப் பின்னர்… பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம்!

Published:

modi in guruvayur - 2026மீண்டும் பிரதமராகியுள்ள பிரதமர் மோடி, குருவாயூர் கோயிலில் ஸ்ரீகிருஷ்ண வழிபாட்டை முடித்த பின்னர், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவுக்குச் சென்றுள்ளார். அவருக்கு அரசு முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது.

2-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றடைந்தார் நரேந்திர மோடி; மாலே விமான நிலையத்தில் மாலத்தீவு அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

முன்னதாக, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ண மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேசினார் அப்போது அவர்…. மக்களின் தீர்ப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். கேரளாவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது. இந்திய அரசு, உங்களுடனும் கேரள அரசுடனும் என்றும் துணை நிற்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். நிபா வைரஸ் பாதுகாப்பிற்கான அனைத்து வசதிகளையும் வழங்க மத்திய அரசு ஒத்துழைக்கும்.

modi in guruvayur3 - 2026மக்கள் தங்கள் மக்கள்பிரதிநிதிகளை 5 வருடங்களுக்கு தேர்வு செய்கிறார்கள், நாங்கள் மக்கள் சேவை செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம். பாஜக., தொண்டர்கள் தேர்தல் அரசியலுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்கும் ஆண்டுக்கு 365 நாட்களும் சேவை செய்கிறார்கள். ஒரு அரசை உருவாக்க மட்டுமே அரசியலுக்கு வரவில்லை. நாட்டை கட்டியெழுப்ப நாம் இங்கே இருக்கிறோம், உலகில் இந்தியா தனது சரியான இடத்தைப் பெறுவதைப் பார்ப்பதற்கு நாம் தவம் கிடக்கிறோம்.

இந்த முறை மத்திய அரசு, கிராமப்புற மற்றும் கடலோரப் பொருளாதாரத்தை வலுப்படுத்த மீனவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள் ஆகியோருக்கு ஒரு தனியான அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் நாடு முழுவதும் விலங்குகளுக்கு ஒரு தடுப்பூசி இயக்கத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறினார் பிரதமர் மோடி.

modi in guruvayur2 - 2026முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கொச்சிக்கு வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் அவரை அம்மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் சனிக்கிழமை இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் சென்றார். குருவாயூர், ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, அங்கிருந்து காரில் புறப்பட்டு குருவாயூர் கோவிலுக்கு சென்ற மோடி, காலை 10 மணி முதல் 11.10 மணி வரை சாமி தரிசனம் செய்தார். மஞ்சள் பட்டு, கதலிப்பழம் ஆகியவற்றை காணிக்கையாக படைத்து சாமியை வழிபடும் மோடி, துலாபார நேர்ச்சை நிறைவேற்றினார்.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

குருவாயூர் கோவிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது. வேத மந்திர கோஷம் முழங்க அவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது. கும்பத்தை தொட்டு வணங்கி, ஏற்று கோயிலுக்குள் பாரம்பரிய வேஷ்டி துண்டு சகிதமாக உள்ளே சென்று வணங்கிவிட்டு வந்தார் மோடி. பின்னர் எடைக்கு எடையாக தாமரைப்பூ வழங்கினார். இதற்காக குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ சந்தையில் இருந்து தாமரைப் பூக்கள் வாங்கப் பட்டன. பிரதமர் மோடி எடைக்கு எடை 112 கிலோ தாமரைப் பூக்களை துலாபாரம் கொடுத்ததாகக் கூறப்பட்டது.

கோவிலுக்குள் பிரதமர் மோடி 20 நிமிடங்கள் இருந்தார். கோவில் நிர்வாகிகள் சார்பில் ரூ 450 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான மனுவை பிரதமரிடம் அளித்தனர். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்த போது, குருவாயூர் கோவில் தெய்வீகமானது மற்றும் அற்புதமானது. இந்த பிரம்மாண்டமான கோவிலில் இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்தேன் என்று குறிப்பிட்டார்.

குருவாயூர் தரிசனம் முடிந்த பின்னர் மோடி, மாலத்தீவுக்கு பயணமானார். அவருக்கு மாலத்தீவில் அரசு முறை வரவேற்பு அளிக்கப் பட்டது.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!
modi in maldives - 2026
2-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றடைந்தார் நரேந்திர மோடி; மாலே விமான நிலையத்தில் மாலத்தீவு அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.

மாலத்தீவு அதிபர் இப்ராகீம் சாலிகுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மோடி பின்னர் மாலத்தீவு நாடாளுமன்றத்திலும் உரை நிகழ்த்த உள்ளார். மாலத்தீவு சுற்றுப் பயணத்துக்கு பின் 9-ஆம் தேதி பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப் பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின்னர் இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற வகையில், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமரின் பயணம் அமைவதாக வெளியறவுச் செயலாளர் விஜய கோகலே கூறி உள்ளார்.

இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்த கையுடன், பிரதமர் மோடி 9-ஆம் தேதி அன்று திருப்பதி வருகிறார். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வரும் அவர் அங்கிருந்து திருப்பதி செல்கிறார். திருப்பதி வேங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்து, பின்னர் தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது. காலை 11 மணி முதல் 12 மணி வரை, இலங்கை அதிபரின் செயலகம் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்படும் என்றும், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் செல்பவர்கள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னதாகவே பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img