உஷார்: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்குபவரா?

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
open door
open door

காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிய கொத்தனார் வீட்டில் 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

சென்னை ஐய்யப்பன்தாங்கல் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). கொத்தனார் வேலை பார்த்துவரும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கியுள்ளார்.

அப்போது ஒரே புழுக்கமாக இருந்ததால் காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் பதறிப்போன மணிகண்டன் நடந்த சம்பவம் குறித்து போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.