
நடிகை, இயக்குனர் விஜயநிர்மலா சிலையை வியாழன் திறந்து வைத்தார் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. விழாவில் பங்கு கொண்டனர்… மகேஷ் பாபு தம்பதிகள் மற்றும் பல பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள், அரசியல் பிரமுகர்கள்!
மறைந்த இயக்குநர் விஜயநிர்மலாவின் சிலையை ஹைதராபாத்தில் உள்ள நானக்ராம்கூடாவில் அவருடைய இல்லத்தில் வியாழனன்று திறந்து வைத்தார்கள். சற்றுமுன் நடிகை, இயக்குனர் விஜய் நிர்மலாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வெண்கலச் சிலையை சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா திறந்து வைத்தார்.
நானக்ராம்கூடாவில் உள்ள கிருஷ்ணா விஜயநிர்மலா இல்லத்தில் இந்தச் சிலையை நிறுவியுள்ளார்கள். விஜயநிர்மலா மிக அழகாக அமர்ந்திருப்பது போல் சிலையை வடித்துள்ளார் கள்.

இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரபல சூப்பர் ஸ்டார் கிருஷ்ணம் ராஜு, சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு அவருடைய மனைவி நம்ரத, பரசூரி கோபாலகிருஷ்ணா, விகே நரேஷ் மற்றும் பலர் பங்கு கொண்டனர். அப்போது சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா பேசுகையில் சிறந்த இயக்குனரான விஜயநிர்மலா தன் மனைவி என்று கூறிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். அது என் பெரிய அதிர்ஷ்டம் என்றார்.
விஜயநிர்மலா நான்கு ஐந்து சினிமாக்களில் நடித்த பின் டைரக்சனில் இறங்குவேன் என்றார். அப்பொழுதே வேண்டாம் என்று சொன்னேன். நூறு சினிமாக்களை செய்த பின்னர் இயக்குனராக ஆகலாம் என்று சொன்னேன். அதேபோல் நூறு சினிமாக்கள் ஆனபின் குறைந்த பட்ஜெட்டில் மலையாளத்திலும், தெலுங்கில் மீனா படமும் செய்தார்.
இரண்டுமே சூப்பர் ஹிட்டாயின. அவர் டைரக்சன் செய்த சினிமாக்கள் 95% சதவிகிதம் ஹிட் ஆனவை. ஏதோ ஒன்றிரண்டு தவிர அனைத்தும் வெற்றி பெற்ற திரைப் படங்களே. அவர் என் மனைவி ஆனது என் அதிர்ஷ்டம். அவர்மேல் அன்போடு இங்கு வந்த அனைவருக்கும் நன்றி என்று கிருஷ்ணா பேசினார்.

விஜயநிர்மலா இத்தனை அதிக சினிமாக்கள் செய்தது ஒரு வரலாறு என்றும் அவருடைய வாரிசுகள் தலைமுறையை தொடர்கிறார்கள் என்றார் பரசூரி கோபாலகிருஷ்ணா.
விஜய நிர்மலாவின் மகன் நடிகர் விகே நரேஷ் பேசுகையில் ஒவ்வொரு தாயும் ஒரு தெய்வமே. ஒரு தேவதையே. என் அம்மாவின் ஆசிகள் கிடைத்த அனைவருமே சிகரத்தைத் தொட்டு விடுவார்கள். எங்கள் அம்மா, கிருஷ்ணா அவர்களின் ஆசிகளோடு இருவரும் சேர்ந்து ஒரு ரோல் மாடலாக வாழ்ந்தார்கள்.
எனக்கு எப்போதுமே நல்லது எடுத்துச் சொல்லி தைரியம் கொடுத்தார்கள். அம்மாவின் ஆசிகள் அனைவருக்கும் இருக்க வேண்டும். ‘மா’ என்ற அமைப்புக்காக நான் எப்போதும் முன் நிற்பேன். அம்மாவின் பெயர் மீது அவார்டு நடிக நடிகைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கொடுப்போம் என்றார்.
மற்றும் இந்த நிகழ்ச்சியில் முரளி மோகன், எஸ்வி கிருஷ்ணா ரெட்டி, அச்சி ரெட்டி, இயக்குனர் பிவிபி, ஆதிசேஷகிரிராவு, சிவகிருஷ்ணா, மாருதி, நந்தினி ரெட்டி, பிரம்மாஜி, இயக்குனர் பிவிபி, சிவ பாலாஜி மற்றும் பலர் பங்கு கொண்டனர்.
200 படங்களுக்கு மேல் நடித்தும் 44 படங்களை இயக்கியும் 30 ஆண்டுகால திரைவாழ்வில் நிலையான இடத்தை பெற்ற விஜயநிர்மலா சென்ற ஆண்டு ஜூனில் காலமானார். அவருடைய திறமைகள் கின்னஸ் ரிகார்டுகளிலும் இடம்பெற்றுள்ளன. விஜய நிர்மலா ஐந்தாம் வயதில் 1950ல் தமிழ் படத்திலும் பதினோராம் வயதில் பாண்டுரங்க மகாத்மியம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து தன் நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.

1964இல் பிரேம்நசீரோடு பார்கவி நிலையம் என்ற மலையாள படத்தில் நடித்தார். கணவர் கிருஷ்ணாவோடு சேர்ந்து 47 படங்களில் நடித்துள்ளார். இவர் கிருஷ்ணாவின் இரண்டாம் மனைவி. மகேஷ்பாபு கிருஷ்ணாவுக்கு முதல் மனைவியின் புதல்வர்.
1971இல் முதல் தெலுங்கு பட பெண் இயக்குனராக மீனா படத்தை இயக்கினார். இரண்டு ஆண்டுகளில் மலையாளப்படம் கவிதாவை இயக்கினார். ரஜினிகாந்த் நடித்த அமர் அக்பர் அன்டோனி படத்தை தெலுங்கில் இயக்கி அதில் கிருஷ்ணாவோடு நடித்தார். 2008-ல் ஆந்திர அரசாங்கம் ரகுபதி வெங்கையா அவார்டு கொடுத்து கௌரவித்துள்ளது.