எனை நோக்கி பாயும் தோட்டா பட நடிகர் தற்கொலை!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
srivast
srivast

தனுஷ் – கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இவர், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக மாடலிங், வெப் தொடர்களில் நடித்துவந்தார். கடந்த புதன் கிழமை ஷூட்டிங்கி இல்லாத போதும், படப்பிடிப்பிற்கு செல்வதாக கூறிச்சென்ற ஸ்ரீவத்சவ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் தேடியதில் அவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் ஸ்ரீவத்சவ்.

stivast-chanderasekar
stivast-chanderasekar

பிசினஸ் மேனான ஸ்ரீவத்சவ்வின் தந்தை அவருடைய பிசினஸிற்காக பயன்படுத்தி வந்தது அந்த வீடு என்பதும், அதில் கடந்த 3ம் தேதியே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மறுநாளான 4ம் தேதி தான் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்ற கொடூரமும் வெளியாகியுள்ளது.

இன்று ஸ்ரீவத்சவ்வின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இல்லாதது இருப்பதுபோலத்தோன்றும் ‘Hallucination’ பிரச்னையால் அவர் அவதிப்பட்டு வந்தார் என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் நடிகராக திரைவானில் சிறகு விரிக்க ஆரம்பித்த ஸ்ரீவத்சவ்வின் திடீர் மரணத்தால் மனமுடைந்த திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.