மார்ச் 1 முதல் புதிய IFSC/MICR code! பிரபல வங்கிகள் அறிவிப்பு!

Published:

bank-1
bank-1

மார்ச் 1 முதல் பேங்க் ஆப் பரோடா, தேனா பேங்க் மற்றும் விஜயா பேங்க்கின் IFSC குறியீடு மாறவுள்ளது. அதே போல் ஏப்ரல் 1 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் IFSC/MICR குறியீடுகளை மாற்றவுள்ளது.

இதனை தொடந்து பிப்ரவரி 28 வரை மட்டுமே பழைய ISFC குறியீடு செல்லும் என்றும், புதிய IFSC குறியீடை தான் மார்ச் 1 முதல் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் ஆன்லைனில் பணமாற்றம் செய்ய முடியாது.

bank-ifsce-code
bank-ifsce-code

இதே போல் பஞ்சாப் நேஷனல் வங்கி பழைய காசோலையிலும், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் IFSC/MICR குறியீடுகளை மாற்றவுள்ளது. பழைய குறியீடு மார்ச் 31 வரை செல்லும். இதனால் நீங்கள் புதிய குறியீடு மற்றும் காசோலை புத்தகத்தை வங்கியில் இருந்து பெற வேண்டும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
bank-ifsc
bank-ifsc

உங்கள் புது IFSC குறியீடை பெற உங்கள் அருகில் உள்ள வங்கி கிளையை அணுகலாம். கட்டணமில்லா தொலைபேசி எண் 1802581700 என்பதை தொடர்பு கொள்ளலாம். அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து MICR Last 4 digits of the old account number என குறுஞ்செய்தியை 8422009988 அனுப்பலாம்.

Related articles

Recent articles

spot_img