தமிழன் தலைகுனிந்து அரை நூற்றாண்டு ஆகிறது!

உரத்த சிந்தனை
stalin-goback-to-modi
stalin-goback-to-modi

ஒடிசாவில் நவீன் பட்நாயக் அரசு தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியிலிருக்கிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது பா.ஜ.க.தான்! ஆனால், பிரதமர் மோடியோ அவரது அமைச்சர்களோ முதல்வர் நவீனை கண்டபடி விமர்சித்ததில்லை!

முதல்வரும் பிரதமரை தடித்த வார்த்தைகளால் ஒருபோதும் சாடியதில்லை. இத்தனைக்கும் அங்கே ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சட்டசபையில் பலமாக மோதிக்கொள்கின்றன!

கண்டன ஆர்பாட்டங்கள், அரசியல் ரீதியான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் கனஜோராக நடக்கின்றன!

மஹாராஷ்டிரா, மே.வங்கம், ராஜஸ்தான், டில்லி போன்ற எதிர்க்கட்சியாளும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ஒடிசா நிலவரம் வியப்புக்குரியதாக விளங்குகிறது! தங்கள் இயலாமையை மறைக்க, கண்டதற்கெல்லாம் மத்திய அரசு மீது பழியைப்போட்டு தப்பிக்க நினைக்கும் இவர்கள் எங்கே!

மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொள்ளாமல், ஆனால், அதேசமயம் தனது அரசியல் தனித்துவத்தை இழக்காமல் ஆட்சி புரியும் நவீன் எங்கே! ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்பது இதுதான்! அதனால்தான் நாடாளுமன்றத்திற்கு, பா.ஜ.க.வுக்கு வாக்களித்தவர்கள்கூட மாநிலத்திற்கு நவீனையே தேர்ந்தெடுத்தனர்!

naveen patnaik
naveen patnaik

இத்தகைய ஒரு சிறப்பான மத்திய-மாநில உறவு நிலவ காரணம், மோடியும் சரி, நவீனும் சரி, தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் பேசும் அரசியல்வாதிகளாக விளங்குவதுதான்!

இந்நேரத்தில் இங்கே ஒன்றை குறிப்பிட்டேயாக வேண்டும்! ஒடிசாவிலிருந்து போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் தயாரிக்கப்பட்டு, ஐந்து மாநிலங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறது! அங்கே அரசியல் பேசாத முதல்வர், அவரது அனைத்து நடவடிக்கைகளையும் அரசியலாக்காத எதிர்க்கட்சி இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது!

ஆனால், நம்ம ஊரில்?

ஆக்ஸிஜன் தயாரிக்க தொடங்கவிருக்கும் ஆலைக்கு எதிராக கோஷம், போராட்டம், கருத்துக்கேட்பு, கூட்டத்தில் கல்வீச்சு!!

தமிழன் தலைகுனிந்து அரைநூற்றாண்டு ஆகிறது!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.