டி.எம்.காளியண்ண கவுண்டர் என்பதே… மரியாதை!

உரத்த சிந்தனை
tmkaliannan - 2026

அவர் பெயர் T.M.காளியண்ண கவுண்டர் என்பதே மரியாதையானதும், பொருத்தமானதும் ஆகும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை ‘முத்துராமலிங்கம்’ என அழைப்பது சரியில்லை!
தேவர் பெருமகனார் என்றாலே அவரைத்தான் குறிக்கும்!

கருணாநிதியே ஒரு முறை தெருக்களில் சாதிப் பெயரை நீக்குவது பற்றி இதைக் குறிப்பிட்டு உள்ளார்.

“பழம் பெரும் தேசபக்தர் பேட்டை C.N.முத்துரங்க முதலியார் அவர்களையும், சேலம் வரதராஜுலு நாயுடு போன்றவர்களை வெறுமனே முத்துரங்கம், வரதராஜு என்றெல்லாம் அழைப்பது மரியாதையாக இருக்காது”- என கருணாநிதியே பேசி உள்ளார்.

tmkaliannan1 - 2026

வ.உ.சிதம்பரம் பிள்ளை என்றுதான் நாங்கள் எல்லாம் பள்ளியில் படித்தோம் – இந்த திரா’விடியர்’கள் வந்துதான் ஏதோ அவரை மளிகைக் கடைக்காரர் மாதிரி வ.உ.சிதம்பரம் என்று எழுத ஆரம்பித்தார்கள்!

ம.பொ.சிவஞான கிராமணியார், பொன்னப்ப நாடார், துணை வேந்தராக இருந்த இரட்டையர்கள் A.ராமசாமி முதலியார், ஏ.லட்சுமணசாமி முதலியார் போன்றோரும்…

தமிழறிஞர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்றோரும்…

கல்வி வள்ளல்களான கருமுத்து தியாகராச செட்டியார், ராஜாசர் அண்ணாமலை செட்டியார், ராஜாசர் முத்தையா செட்டியார் போன்றோரும்…

அவரவர் சாதி ஒட்டுக்களோடுதான் அறியப்பட்டனர் – மதிக்கப் பட்டனர்!
ஈவேரா வே – ராமசாமி நாயக்கர் என்றும்…
ராஜாஜி – ராஜகோபாலாச்சாரியார் என்றும்…
காமராசர் – காமராஜ் நாடார் என்றுமே அறியப்பட்டனர்!

அந்தக் காலப் பத்திரிகைகளில் Mr.நாடார் என்றாலே காமராஜையும்…
Mr Naicker – என்றால் ஈவேராவேயும் குறிக்கும்!
படையாச்சியார் என்றாலே அது திரு.S.S.ராமசாமி படையாச்சி அவர்கள்தான்!
திமுகவினரே ராஜாஜியை “ஆச்சாரியார்”- என்றே அழைப்பார்கள்!

எனவே T.M.காளியண்ணன் எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல!இது திராவிட மாய்மாலம்! T.M.காளியண்ண கவுண்டர் என்பதே அப்பெருமகனாருக்கு நாம் செய்யும் மரியாதை!

  • முரளி சீத்தாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.