
— சீதாபதி —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
சோனியா காந்தி எழுதியுள்ள நினைவு குறிப்பு நூலுக்கு ‘உடைமை’ (அல்லது சொந்தமான கதை) என்று தலைப்பிட்டதற்கு பதிலாக ‘கடமை’ என்று பெயரிட்டு இருக்கலாம். குறிப்பாக, குடும்பத்திற்கான கடமை, என்றிருக்கலாம் . அதுதான் அந்த நூலின் கருத்து. அவர் தேர்வு செய்த ஒரே ஒரு விஷயம் அவரது வாழ்க்கையை வரையறுத்துள்ளது .
1965 இல் ரெஸ்டாரெண்டில் சந்தித்த ஒரு மனிதருடன் காதலின் விழுந்தார். அதனால் பல கடமைகள் அவருக்கு வாரிசுடமையாக வந்தன. 1968 இல் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது. 1983 ல் இந்திய குடியுரிமை பெற்றது. 1988 ல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரானது. ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுக்கு பிரதான வாக்கு சேகரிப்பவராக ஆனது. இதெல்லாம் அவர் விரும்பியது அல்ல தலை விதியால் , குறிப்பாக சஞ்சய், இந்திரா மற்றும் அவர் மிகவும் நேசித்த ராஜீவ் காந்தியின் மரணத்தால், உந்தப்பட்டு தன் வாழ்க்கையை வாழ்வதற்கு பதிலாக தன் கடமையை நிறைவேற்ற வந்தவை.
இது வலிமையான கதை. சுவைப்பட சொல்லப்பட்டுள்ளது. இந்த நூல் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்காக எழுதப்பட்டதல்ல. இதில் பிரணாப் முகர்ஜி, மேனகா காந்தி பற்றி சில இடங்களில் மனம் புண்படும்படி உள்ளவை பொருட்படுத்த தக்கவை அல்ல. அந்த நேரத்தில் நடந்தது பற்றியோ அல்லது பழைய விரோதத்தை தீர்த்துக் கொள்வது என்ற வலையிலோ சிக்கிக் கொள்ளாமல் சோனியா காந்தி என்ற நபர் அதிகாரப்பூர்வமாக, சிறப்பானவராக வெளிப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி தன் எதிரிகளை அனாயசமாக கடந்து செல்கிறார் என்றால் தன் கணவர், மாமியார், மகன் ஆகியோரை அதைவிட லாவகமாக கடந்து செல்கிறார் . இதுவரை எந்த பிரதமருக்கும் கிடைக்காத மிக வலுவான பெரும்பான்மை பலத்தை 1984 இல் பெற்ற போதிலும் ராஜீவ் காந்தி அதை ஊதாரித்தனமாக வீணாக்கினார். ஒருவேளை , பிரதமராவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியலில் அனுபவமோ, ஆர்வமோ இல்லாத விமானியாக இருந்ததால் அப்படி வீணாக்கினாரோ ? ஆனால் சோனியா காந்தி இதையெல்லாம் ஏற்கவில்லை . அவருடைய பார்வையில் ராஜீவ் ஒரு ‘அபிமன்யு’ , சதிகாரர்களாலும் எதிரிகளாலும் சூழப்பட்டவர்.
பிரதமர்களின் மகனாக, பேரனாக இருந்த போதிலும் அவர் நியாயமற்ற முறையில் தாக்கப்பட்டார். காரணம் அவர் ஆட்சி முறைமையை மாற்ற வந்த வெளியாள். அந்த முறைமையால் ஆதாயம் அடைந்தவர்கள் மாற்றத்தை விரும்பவில்லை, அவரை எதிர்த்தார்கள் . இந்திரா காந்தியும், குறிப்பாக, ராகுல் காந்தியும் இதுபோன்ற கூரிய அவதானிப்பிலிருந்து விலக்கு பெற்றவர்கள். அவர் இந்த நூலின் துவக்கத்தில் சொன்னது போல் , ‘மரபான இந்திய தாயைப் போல் தான் இத்தாலிய தாயும், எந்த வேறுபாடும் இல்லை. மகன்தான் முதலும் முக்கியமானவனும் ‘.
இந்த குருட்டுத்தனம் ஒரு பண்பு. அச்சமூட்டக்கூடியதல்ல. சோனியா காந்தி முதலும் முழுமையாகவும் தன் குடும்பத்திற்கு விசுவாசமானவர். இந்தியா பன்முகத்தன்மை கொண்டது, அனைவரையும் அரவணைக்க கூடியது என்று இந்தியா பற்றிய அவரது கருத்தும் கூட நேரடி அனுபவத்தில் வந்ததல்ல. மாறாக குடும்பத்திலிருந்து பெறப்பட்டது . அந்த நூலில் மிகவும் நெகிழ்ச்சியூட்டக்கூடிய ஒரு பகுதி அவர் தன் மாமியாருடன் அலகாபாத்தில் உள்ள அவர்களது வரலாற்றுரீதியில் குடும்ப வீடான ஆனந்த பவனத்திற்கு சென்றது. இங்குதான் சோனியா காந்தி அவரது குடும்ப வரலாறும் , காங்கிரஸ் கட்சியின் வரலாறும் , இந்தியாவின் வரலாறும் பின்னி பிணைந்து இருப்பதை தெரிந்து கொண்டார் . அந்த மூன்றும் தனித்தனியானவை இல்லை. ஒன்றுதான்.
இது ஏதோ வார்த்தை விளையாட்டு அல்ல. விஷயபூர்வமானதுதான். எடுத்துக்காட்டாக, சோனியா காந்தி 22 ஆண்டுகளாக தலைமையேற்று வழி நடத்திய காங்கிரஸ் கட்சியை மாறிக்கொண்டிருக்கும் தேசத்தின் எதிர்பார்ப்புகளை எதிரொளிக்கும் பொது ஸ்தாபனமாக கருதவில்லை. தன் கணவராலும் அவரது குடும்பத்தாராலும் வளர்க்கப்பட்டு வாரிசுடமையாக வந்த குடும்ப சொத்தாக கருதினார். 1988 அவர் காங்கிரஸ் தலைமை ஏற்ற போது நாடு அவரது உதவியை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. வாரிசுடமையால் வந்த குடும்ப சொத்தை உயிர்ப்புடன் வைப்பதற்காக அவர் வந்தார். ராஜீவ் காந்தியை பிரதமராக வேண்டாம் என தடுத்துப் போராடியது பிரதமராகும் பேராசையிலிருந்த பிரணாப் முகர்ஜிக்கு அதிக தகுதி இருந்தது என்பதற்காக அல்ல (அவருக்கு நிச்சயமாக அந்த தகுதி இருந்தது). மாறாக ராஜீவ் அதிகார பீடம் ஏறினால் தனது திருமண உறவும் குழந்தைகளும் பாதிக்கப்படும் என்பதால்.
இன்று காங்கிரஸ் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளில் ஒன்று, ஒரு காலத்தில் அவர்களை பதவியில் அமர்த்திய இந்தியா இன்று அடையாளம் தெரியாதபடி மாறிவிட்டது. கட்சி அதற்கு ஏற்ப மாறவில்லை. இந்த (உடைமை) நூலை படிக்கும் போது அதற்கான காரணம் நமக்கு புரிகிறது. கடைசியில் வரும் சிறு குறிப்பு தவிர அவரது குடும்பத்தின் (அவருடையதும் கூட) பார்வையிலான இந்தியா 1990 களின் உறைந்து கிடக்கிறது. எண்ம எழுச்சியில் நாட்டம் , உயர் கல்வி, வேலை வாய்ப்பு, நகரமயமாதல் என்ற புதிய இந்தியாவின் புதிய பிரச்சினைகளுக்கு அங்கு இடம் இல்லை. மிக நீண்ட காலம் காங்கிரஸ் தலைவராக இருந்தவர், என் கணவரின் என் மாமியார் கற்பனைகளை எல்லாம் மீறி இந்தியா மாறி விட்டதா ? இந்த மாற்றங்களுக்கு ஏற்ப காங்கிரஸை நாம் எப்படி மறுசீரமைப்பது ? என்ற கேள்விகளை கேட்க மறுக்கிறார்.
சோனியா காந்தி நீடித்திருப்பதற்கு காரணம் அவர் ஒரு அபூர்வமான அரசியல்வாதி. அவர் அரசியல் இருப்பது அவருக்காக அல்ல. அதனால்தான் அவரால் 2004 இல் தாம் பிரதமராக வேண்டாம் என்ற புகழ்பெற்ற முடிவை மேற்கொள்ள முடிந்தது. பல்வேறு வேறுபாடுகளை கொண்டது இந்தியா என்ற நேரு – காந்தி குடும்பத்தின் கருத்துக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் – பாஜக என்ற உறுதியான கண்ணோட்டம் அவருக்கு இருக்கிறது. இது இவரை பாஜக எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் பிம்பமாக, கடைசி முகலாய மன்னன் பகதூர் ஷா ஜப்பாரை நினைவு படுத்துவதாக இருக்கிறது.
ஆனால் அவரது தனிப்பட்ட, மரபு போல் தோற்றமளிக்கும் சுயநலமின்மை 21 நூற்றாண்டில் நவீன தேசபக்தியை கோரும் நாட்டுடன் முரண்படுகிறது. அவரது முதல் கடமை மற்ற இந்தியர்களுக்கு அல்ல (நவீன குடியுரிமை இதைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது ) மாறாக குடும்ப உறுப்பினர்களுக்கு தான். அவர் காங்கிரஸை உயிர்ப்புள்ள அமைப்பாக பார்க்காமல் வாரிசுடமையாக பெற்ற உயரிய பொக்கிஷமாக பார்க்கிறார். அதனால்தான் 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸை புத்துயிர்வூட்டவோ புனரமைக்கவோ முடியாமல் போனது . இது அவரது பெரும் தோல்வி . பாஜகவின் வளர்ச்சியால் தங்கள் வாரிசுடமை பாதிக்கப்படாமல் பாதுகாக்க காங்கிரஸின் தலைமையேற்றார். அவரது நீண்ட குடும்ப தலைமையே நரேந்திர மோடியின் எழுச்சிக்கு காரணமானது.
சோனியா காந்தி தன் கடமையை செய்துள்ளார். ஆனால் இவ்வளவு நீண்ட காலம் அவரை முன்னிறுத்திய காங்கிரஸும் அதன் கூட்டாளி கட்சிகளும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளார்களா ? 1965 இல் கேம்பிரிட்ஜில் இருந்த அந்த கிரேக்க ரெஸ்டாரெண்டில் ராஜீவ் காந்தி சரியானதை தேர்வு செய்தார். ஆனால் அதற்கு பிறகு வந்த தசாப்தங்களில் நாம் செய்தோமா ?
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
‘பி வி நரசிம்ம ராவ்’, ‘மோடிக்கு முன்பு பாஜக’ என்ற நூல்களை எழுதியுள்ளார் சீதாபதி.


