திராவிட இயக்கத்தினர் போல் கூசாமல் பொய் சொல்வோரை வேறெங்கும் பார்க்க முடியாது!

Published:

jeyaranjan - 2026

ரகுராம் ராஜனுக்கும் அரவிந்த் சுப்ரமணியத்திற்கும் என்ன பொருளாதாரம் தெரியும்? எங்களை மாதிரி பல ஆண்டுகள் முட்டி மோதி படித்தவர்களா?”

இதை யார் சொல்வது? ஜெயரஞ்சன்!
இவர் தமிழகத்தின் தற்குறி ஊடகங்களிலேயே பேசி அரைகுறைகளால் பொருளாதார மேதை என்று அழைக்கப் பட்டவர்.

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் எம் எஸ்ஸி படித்து சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் வாங்கி சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.

இவருடைய கட்டுரைகளை சர்வதேசப் புகழ் பெற்ற பொருளாதார ஆராய்ச்சிப் பத்திரிகைகளில் தேடித்தேடிப் பார்க்கிறேன். இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.

மாறாக ரகுராம் ராஜன் படித்த இடங்கள். IIT, IIM (A) Sloan’s School of Management, MIT! அவர் 2003ல் புகழ் பெற்ற ஃபிஷர் பிளாக் பரிசு வாங்கியவர். அது 40 வயதிற்கும் குறைவான பொருளாதார மேதைகளுக்குக் கொடுக்கப்படுவது.

அரவிந்த் சுப்ரமணியம் தில்லி செயின்ட் ஸ்டீஃபன் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர். பின்னால் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் எம்ஃபில், டிஃபில் வாங்கியவர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

திராவிட இயக்கத்தினரைப் போல கூசாமல் பொய் சொல்பவர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது.

எப்படி இருப்பினும் இப்போது இவர்கள் இருவரும் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருப்பதால், பதவியில் நீடிப்பது தன்மானக் குறைவு என்பதை திரு ஜெயரஞ்சன் உணர்ந்து விலகுவதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

தமிழகத் தற்குறி ஊடகங்கள் அவருடைய மேதைமையை வெளிப்படுத்த நிச்சயம் வாய்ப்புகளை வழங்குவார்கள்.

  • அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன்

Related articles

Recent articles

spot_img