நாடாளுமன்றத்தைக் கலக்கிய நிர்பயா ஆவணப்பட பதிவு: ராஜ்நாத் சிங் விளக்கம்

இந்தியா

rajnath-singh-parliamentபுது தில்லி: நிர்பயா ஆவணப் படப் பதிவு இன்று காலை நாடாளுமன்றத்தைக் கலக்கியது. நிர்பயா ஆவணப்படம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. அவை ஒத்திவைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அவை மீண்டும் கூடியபோது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த ஆவணப் படம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, ‘நிர்பயா வழக்கு குற்றவாளியிடம் பேட்டி எடுத்த விவகாரத்தில் விதிமீறல்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை முடிந்ததும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிறைத் துறை நிர்வாகம், பேட்டி எடுபப்தற்காகக் கொடுத்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தி பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்றும், அதனை திரும்ப ஒப்படைக்குமாறும் தொடர்புடைய ஊடகத்திடம் கோரப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. இந்தப் பேட்டியினை வெளியிட நீதிமன்றம் மூலம் தடையாணை பெறப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஊடகங்கள் வெளியிடத் தடை உள்ளது… என்று விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவையில் இன்று அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால், 15 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.