நீங்கள் எப்படி பிரதமா் பதவிக்கு வந்தீா்கள்? உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பிரதமராகும் கனவு இருந்ததா?
இந்தக் கேள்வி வாஜ்பாயிடம் அவா் முதன்முறையாக பிரதமா் பதவியேற்ற பிறகு ‘நயி துனியா’ என்ற பத்திாிகையில்… ஒரு பேட்டியின் போது கேட்கப்பட்டது.
அதற்கு வாஜ்பாய் அளித்த பதில் :
நான் அப்போது சங்க பிரசாரகராக இருந்தேன். குருஜி கோல்வல்கா் (தலைவராக) சா் சங்கசாலக்காக இருந்தாா். எனக்கோ அல்லது ஆா்எஸ்எஸ் – சங்கத்திற்கோ ஒரு கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் ஒரு துளியும் இருந்ததில்லை. சங்கப் பணிகளை மட்டுமே மட்டுமே பாா்பபோம்.
1948இல் மகாத்மா காந்தி கொலை செய்யபட்டாா். அவா் கொலைக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்., இருப்பதாகக் கூறி, இயக்கம் தடை செய்யப் பட்டது. உச்ச நீதிமன்றம் விசாரணை செய்ததில், மகாத்மாவின் கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்று தீா்ப்பு வழங்கியது.
ஆனால் நேரு தலைமையில் இருந்த நாடாளுமன்றம் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தொடா்பு உண்டு என்று தீா்மானம் நிறைவேற்றியது. அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களுமே உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்தத் தீா்மானத்தை எதிா்த்துக் குரல் கொடுக்க அப்போது யாருமே அங்கு இல்லை.
இதை செய்தித்தாளில் படித்துக் கொண்டிருந்த குருஜி கூறினாா்… இனி நம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.
சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாய, லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்ட ஐந்து பேரை ஆர்.எஸ்.எஸ்., பணிகளை கவனிப்பதில் இருந்து விடுவித்து, இனி நம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்; ஆவன செய்யுங்கள் என்று கூறி அரசியலுக்கு அனுப்பி வைத்தாா்.

அன்று தொடங்கியது எங்கள் யாத்திரை. இனி நிற்காது. தொடா்ந்து சென்று தன் லட்சியத்தை அடையும்.
ஆர்.எஸ்.எஸ்., ஒரு லட்சியத்தை நோக்கி செயல்பட ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து பின்வாங்குவதே இல்லை. இன்று மிகக் குறைந்த மெஜாாிடியாக இருந்தாலும் முழு மெஜாாிடியுடன் நாம் நம் லட்சியத்தை அடைவோம்… என்றார் வாஜ்பாய்.
– உமாசங்கா்
இனà¯à®±à¯ பாராளà¯à®®à®©à¯à®±à®¤à¯à®¤à®¿à®²à¯à®®à¯ பெரà¯à®®à¯à®ªà®¾à®©à¯à®®à¯ˆà®¯à®¾à®• உளà¯à®³à¯‹à®®à¯, வரà¯à®®à¯ காலஙà¯à®•ளிலà¯à®®à¯ வரà¯à®µà¯‹à®®à¯ எனà¯à®ªà®¤à¯‡ BJP