கொரோனா: நடிகை ஆன்ட்ரியாவுக்குத் தொற்று!

சற்றுமுன் சினிமா
Andriya 6
Andriya 6

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு. கடந்த 1ஆம் தேதி முதல் முறையாக தினசரி தொற்று 4 லட்சத்தைத் தாண்டி அதிர்ச்சி அளித்தது.

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பாலிவுட்டைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது

என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.