எனது தம்பி மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்: மு.க. அழகிரி!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
stalin alagiri
stalin alagiri file picture

மதுரை: தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தோதலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவை ஆட்சியமைக்க வருமாறு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை அழைப்பு விடுத்தாா்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவினா் வெள்ளிக்கிழமை ( மே 7) காலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவிப் பிரமாணம் எடுத்துகொள்ள உள்ளனா்.

இந்த நிலையில், மு.க. ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரி இன்று தனது தம்பிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில்,என் தம்பி முதலமைச்சராவதில் பெருமை.முதலமைச்சராக நாளை என் தம்பி மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பதில் பெருமை அடைகிறேன். முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.