அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை!

சற்றுமுன்
rain in tamilnadu
rain in tamilnadu

இன்று 13.05.2021 மாலை 05.10 மணிக்கு செயற்கைக் கோள் படம் திருச்சிக்குத் தெற்கே தென் தமிழகம் முழுவதும், கேரள மாநிலம் மீது மழை மேகங்கள் பரவியுள்ளதைக் காட்டுகின்றன.

வடக்கில் சென்னைக்கு மிக அருகிலும் மேகங்கள் காணப்படுகின்றன. இன்று அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியின் காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக 4 நாள்களுக்கு கேரளம், தமிழகம், கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.