மதுக் கடைகளை மூடக் கோரிய மனு தள்ளுபடி!

சற்றுமுன் மதுரை
madurai highcourt - 2026
madurai-highcourt-branch

மதுக்கடைகளை மூடக் கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.

கொரோனா தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரிய வழக்கில், ஊரடங்கு உத்தரவுகளில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டு வருவதால் , இந்து மனு தற்போது ஏற்புடையதல்ல என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்த மனுவை, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக, கடந்த வாரம் திங்கள் கிழமை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்த போது, அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.