இன்றைய ‘பேனர்’… செய்திகள்!

Published:

banner3 - 2026
கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தின் அருகில்…

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் 20,000 பேனர்கள், கொடிகள், கட்அவுட்கள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சிகள், வியாபாரிகள், தனியார் சார்பில் சாலையோரம் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. சென்னையில் 2500 கொடிகள் பேனர்கள், கட் அவுட்களை மாநாகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் இயக்கப்படும் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு – 94451 90205, 94451 90698, 94451 94802 ஆகிய தனி அலைபேசி எண்ணுடன் கூடிய 3 ரோந்து வாகனங்கள் செயல்பாட்டுக்கு வரும் – மாநகராட்சி..

banner2 - 2026

அருப்புக்கோட்டையில் அரசு விழாவில் அதிமுக-வினர் விளம்பரப் பலகைகள் வைத்ததால் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜூ ஆகிய இருவரும் விழாவில் பங்கேற்க மறுப்பு.

உடனடியாக விளம்பர பலகைகளை கட்சியினர் அகற்றியதால் அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இனி இது போன்று பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என அமைச்சர்கள் கட்சியினருக்கு உத்தரவு.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?
banner1 - 2026

நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள டிஜிட்டல் போர்டுகளை தேடி சென்று அகற்றும் பணியில் தென்காசி நகராட்சி பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஈரோட்டில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

ஈரோட்டில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி பேனர் வைத்தது தொடர்பாக கும்பகோணத்தில் 9 வழக்குகளும், திருவிடைமருதூரில் 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் இனி பேனர் கட்டவுட் வைத்தால் நான் கலந்து கொள்ள மாட்டேன்..!! எனக்கு பின் என் வாரிசுகள் நிச்சையமாக அரசியலுக்கு வர மாட்டார்கள்..!! ரெண்டையும் சொன்னது #சுடலை தான்..

கட்டவுட் என்பதை கெட் அவுட் என்று முதலில் சொன்ன கட்சி ம தி மு க – வைகோ 2006 தேர்தலுக்கு முன்னர் . தி மு க விடமிருந்து கூட்டணி மாறியதற்கு வைகோ வால் சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று … என் கட்டவுட்டை தி மு க நபர்கள் எரித்தார்கள் என்பது தான்

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img