சென்னை:
தமிழக சட்டமன்ற உரிமைக் குழு தங்களுக்கு அளித்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர்
சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைக்
கொண்டு வந்ததாக சட்டமன்ற உரிமைக் குழு திமுக., உறுப்பினர்கள் 21 பேருக்கு
நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன், 8 திமுக
எம்.எல்.ஏக்கள் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
உரிமைக்குழு நோட்டீஸ் தொடர்பாக விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் கோரி திமுக
எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்ததாகத் தெரிகிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக அரசுக்கு பெரும்பான்மை
இல்லாததால் உரிமை மீறல் கொண்டு வர முடியாது.
உரிமைக்குழு நோட்டீசுக்கு விளக்கமளிக்க 15 நாள் அவகாசம் கேட்டு சபாநாயகருக்கு
கடிதம் அளித்துள்ளோம் என்று கூறினார்.



