சென்னை:
அதிமுக உட்கட்சி பூசலில் ஆளுநர் தலையிட முடியாது என்று அரசு வழக்கறிஞர்
தெரிவித்துள்ளார். 19 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம்
கடிதம் கொடுத்துள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை
நடைபெற்றது. மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை நிரூபிக்க
உத்தரவிடப்படும். ஆட்சிக்கு எதிராக அல்ல: முதல்வருக்கு எதிராகத்தான்
எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அதிமுக அரசு பெரும்பான்மை
இழந்துவிட்டதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.



