சென்னை:
முதல்வர் எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் 111 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
பங்கேற்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
எடப்பாடி அரசுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9
பேர் முதல்வரை தொடர்பு கொண்டு பேசினர். அரசுக்கு ஆதரவு அளிப்பதாக டிடிவி ஆதரவு
9 எம்எல்ஏக்கள் முதல்வரிடம் உறுதியளித்தனர்.
கூட்டத்துக்கு வராத பேராவூரணி எம்.எல்.ஏ விளக்க கடிதம் கொடுத்துள்ளார்.
கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் முதல்வருக்கு முழு ஆதரவு
தெரிவித்துள்ளனர்.



