சென்னை:
புளூவேல் தொடர்பாக நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாமல் எஸ்எம்எஸ் அனுப்பினால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி., ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று டிஜிபி ராஜேந்திரன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாமல் புளூவேல் விளையாட்டு குறித்த செய்தியை பிறருக்கு
அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். பரபரப்பான குறுஞ்செய்திகளை
அனுப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
புளூவேல் விளையாட்டு மூலம் பிறரை தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குரிய
குற்றம். இந்த விளையாட்டு தொடர்பான இணையதள இணைப்புகளை பிறருக்கு அனுப்புவதை
தவிர்க்க வேண்டும். புளூவேல் விளையாட்டை பகிர்ந்தாலும் நடவடிக்கை
எடுக்கப்படும்.
புளூவேல் விளையாடும் சிறுவர்களுக்கு உளவியல் ரீதியான அறிவுரை வழங்கப்பட
வேண்டும். புளூவேல் விளையாட்டை 12 முதல் 19 வயது வரை உள்ளவர்கள்
விளையாடுகிறார்கள். இதனை விளையாடுபவர்களின் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில்
மாற்றம் ஏற்படும்.
பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களின் மனநிலையில் ஏதாவது வித்தியாசமான
மாற்றம் தெரிகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
கல்வியில் ஆர்வம் குறைந்து மதிப்பெண்கள் குறைந்துள்ளனவா என அவர்களது
நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்.



