விடாது அழுத ஆடு மேய்த்த சிறுவன்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
goat - 2026

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வசிக்கும் எ.ஹரிராஜ், ஆட்டு மந்தை வைத்துள்ளார். 150க்கும் மேற்பட்ட ஆடுகளை இவர் வளர்த்து வருகிறார்.

7 வயது சிறுவன் அந்த ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அச்சிறுவனுடன் 10வயது சிறுவனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்.

10வயது சிறுவன் 7வயது சிறுவனை அடிக்கவும் அவன் அழுதுகொண்டே இருந்தான். அப்பக்கமாக வந்தவர்கள், ஏன் அழுகிறாய் என்று கேட்டதும். அவன் தான் அடித்தான் என்று கை காட்டியிருக்கிறான்.

உன் தம்பிதானே ஏன் அடிக்குற? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு, இவனா என் தம்பி. இவன என் அப்பா 5 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்குனாறு என்று உளறியிருக்கிறான்.

அதிர்ச்சியான அவர்கள் தீர விசாரிக்கவும் தான் ஹரிராஜின் மகன் என்றும், இச்சிறுவனை ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவரின் மூலமாக 5 ஆயிரத்திற்கு தந்தை விலைக்கு வாங்கினார் என்றும் கூறியிருக்கிறான்.

இதன்பின்னர் அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து விசாரித்து புதுக்கோட்டை மாவட்டம் செல்லத்தூர் கிராமத்தில் உள்ள பெற்றோரிடம் சிறுவனை ஒப்படைத்துள்ளனர்.

சிறுவன் எப்படி ஹரிராஜிடம் வந்தான் என்பது குறித்து விசாரணை நடத்த தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.