கணநொடியில் கடக்கும் கதிமான் இதுதான்..!

இந்தியா சற்றுமுன்
train - 2026

இந்தியாவிலையே மிக அதிவேகமாக செல்லக்கூடிய கதிமான் விரைவு ரயில் செல்லும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

மின்சார ரயில், மெட்ரோ ரயில், மோனோ ரயில், அதி விரைவு ரயில் என இந்தியாவில் ரயில் சேவை பல விதங்களில் வழங்கப்பட்டுவருகிறது.

இதில் அதிவிரைவு ரயில்கள் நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுகிறது. இந்தியாவில் பலவிதமான அதிவிரைவு ரயில்கள் இருந்தாலும், அதில் மிகவும் வேகமான ரயில் என்றால் அது கதிமான் விரைவு ரயில் தான்.

கதிமான் விரைவு வண்டியை இந்திய ரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி தில்லியில் இருந்து கிளம்பி ஆக்ரா வரை சென்று திரும்பும்.

இந்த வண்டி மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும். இது இந்தியாவில் இயங்கும் தொடர்வண்டிகளிலேயே அதிக வேகத்தில் செல்லக் கூடியது. இந்த வண்டி நூறு நிமிட நேரத்தில் இலக்கை அடைந்து விடுகிறது.

இந்நிலையில் கதிமான் விரைவு ரயில் ஒரு ரயில் நிலையத்தை அதிவேகத்தில் கடக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பிரமிக்கவைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.