
நான் மதுரைக்காரி க்கோ…..த்…. கீழ உள்ளத அறுத்திறுவேன்.. என்று நாகரீகமாகப் பேசுபவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் அளவுக்கு இருக்கின்றன தமிழ் ஊடகங்கள்! உலகின் தலை சிறந்த மொழி தமிழ் இன்று இவர்களால் தலைகுனிந்து, காப்பாற்றுவார் இன்றி தவிக்கிறது.
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று காறித் துப்பிய ஈனத்தங்களை எல்லாம் தாத்தா என்று சொல்லிக் கொண்டு திரியும் வீணர்களை ஹீரோக்களாக தமிழ்ச் சமூகம் எண்ணிக் கொண்டிருந்தால், இந்த தறுதலைத் தனம்தான் மேலோங்கி யிருக்கும்! இதற்கு தூபம் போட்டுக் கொண்டிருப்பவை சில தரங்கெட்ட ஊடகங்களும் ஊடகக் காரர்களும் தான் என்று தமிழ்ச் சமூகத்தின் மூத்தவர்கள் கை காட்டும் போது, நாம் மௌனமாகத்தான் இருக்க நேரிடுகிறது.
அதனால்தான், #த்தூ என்று விஜயகாந்த் காறித் துப்பிய போது, கண்களில் கோபம் மின்னவில்லை! மும்பை ரெட்லைட் ஏரியாவை விட மோசமானவர்கள், காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று திமுக.,வின் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஒட்டுமொத்த ஊடகங்களையும் திட்டித் தீர்த்த போது, கூனிக் குறுகி நிற்கத்தான் முடிந்தது!
இவர்களின் கூற்றை மெய்ப்பிப்பது போல் ஒவ்வொரு நாளும் காட்சி ஊடகங்களில் நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக செய்தி ஊடகங்கள் தரங்கெட்டு, தமிழினத்தின் பெருமையை சவக்குழியில் தள்ளிக் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு சாட்சியாய் நடந்த நிகழ்வு தான் மாலை முரசு டிவி., யில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

ஜூன் 3ம் தேதி நடைபெற்ற விவாத நிகழ்ச்சி விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது சமூகத் தளங்களில்! இது குறித்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார் கூறுபவை…
முதலில் ஊடக அறம் மீறிய “மாலை முரசு” தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முரசு தொலைக்காட்சியில் “காட் மேன்” வெப் சீரியல் சம்பந்தமான முரசரங்கம் என்கின்ற நிகழ்ச்சியில் கருத்தாளர் ஆக பங்கேற்க வேண்டுமென எம்மை முரசு தொலைக் காட்சியிலிருந்து “ஜோஸ்வா” என்கின்றவர்
அழைத்தார்.
நிகழ்ச்சியில் நெறியாளராக முக்தார் பங்கேற்றார். எம்முடன் முரசு தொலைக்காட்சி அரங்கத்தில் சுந்தரவள்ளி – மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்பாக பங்கேற்றார். வெளியிலிருந்து அந்தணர் முன்னேற்ற கழகம் திரு பாலாஜி ஆத்ரேயா, பத்திரிக்கையாளர் குமரேசன், எழுத்தாளர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிகுந்த கண்ணியத்தோடு விவாதம் நடைபெற்றது. தீக்கதிர் குமரேசன் அவர்கள் கருத்து சுதந்திரம் என்பது ஒருபுறம் இருந்தாலும் சமூக பொறுப்போடு படம் எடுக்க வேண்டும் என்று ஒரு கருத்தைச் சொன்னார் அதை ஆதரித்து நன்றியும் சொன்னேன். விவாதத்தில் பேசிய சுந்தரவள்ளி “காட் மேண்” பட விவகாரத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ புத்தகங்களை யெல்லாம் எழுதினார்கள். அப்புறம் எரிக்கப்பட்டது என்று சொன்னார். அமைதியாகத்தான் இருந்தேன்.
பார்ப்பனர்கள் என்று சுந்தரவள்ளி பேச ஆரம்பிக்க நான் உடனே இடைமறித்து எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்த வேண்டாம் என்று சொல்ல முற்படும் போது, நெறியாளர் முக்தார் கண்டுகொள்ளாமல் இருந்தார். திரும்பவும் “பார்ப்பனர்” என பேச ஆரம்பிக்க, குறிப்பிட்ட சமுதாயத்தை வரை விமர்சித்துப் பேச வேண்டாம் என்று மீண்டும் சொல்கிறேன்.
உடனே நாம் தமிழர் கட்சி காரன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்ல என்று சொல்லி சுந்தரவள்ளி யிடம் நீ பேசு மா என்று சொன்னேன். உடனே சுந்தரவள்ளி நாம் தமிழர் கட்சி என்ன பெரிய “புடுங்கீகளா” என்று சுந்தரவள்ளி முதலில் தரம் தாழ்ந்த வார்த்தை பேசியபோதும் நெஞ்சுக்கு நீதி பேசும் நெறியாளர் முக்தார் கண்டிக்கவில்லை.
மரியாதை கெட்டுவிடும், நீ என்ன பெரிய ஆளா யோவ் என என்னை நோக்கி சுந்தரவள்ளி பேச , நான் சுந்தரவள்ளி “பெண்” என்பதால் அமைதி காத்தேன். அப்போதும் முக்தார் கண்டிக்கவில்லை.
ராம ரவிக்குமார் ஒன்றும் “பெரிய புடுங்கி” கிடையாது என்று சுந்தரவள்ளி பேசியவுடன் தான் நான் எதிர்வினை ஆற்றினேன்.
உடனே முக்தார் என்னைத்தான் திரும்பத் திரும்ப கண்டிக்கும் வகையில் பேசினார். கோபமான நிலையில் சுந்தரவள்ளி தன்னை தானே “தேவடியாள் ” என சொன்னபோதும் , வார்த்தை பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லவில்லை.
நிகழ்ச்சி இடைவேளை சமயத்தில் தரம் தாழ்ந்து சுந்தரவள்ளி நடந்து கொண்ட சம்பவம்….
தண்ணீர் குடிக்கும் கண்ணாடி டம்ளரை எடுத்து தட்டிவிட்டு உடைத்து சுந்தரவள்ளி அடாவடி செய்ததையோ, நான் மதுரைக்காரி, ங்கோத்தா சாமான் அறுத்துடுவேன், என்றெல்லாம் அநாகரிகமாக நடந்ததை கண்டிக்காமல், தடுக்காமல் அரங்கில் நடந்து கொண்டனர்.
பெண் என்கின்ற காரணத்தால் கண்ணியத்தோடு மிகுந்த பொறுமையோடு அமைதி காத்தேன்.
இதேபோல நான் வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தாலோ, நடந்து கொண்டிருந்தாலோ இந்த ஊடகத்தில் இப்படி ராம ரவிக்குமார் நடக்கலாமா? என்று இப்படி எல்லாம் கண்டனங்கள், பிரச்சினைகள் நடந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆனால் அப்படி நான் நடந்து கொள்ளவில்லை.
நிகழ்ச்சி இடைவெளி நேரத்தில் நடந்த இந்த வீடியோ காட்சியை மொபைல் போன் மூலமாக படமெடுத்து பொது வெளிக்கு அனுப்பிய ஊடக அறமற்ற தனத்தை மாலை முரசு நிர்வாகமும், நிர்வாகத்தில் பணி செய்பவர்களும் நிர்வாகமும், நிர்வாகத்தில் பணி செய்பவர்களும் சுந்தரவள்ளியும்
முன்கூட்டி திட்டமிட்டு செய்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
இது கண்டனத்திற்குரியது. இந்துத் தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.
இதுகுறித்து மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாக பொறுப்பாளர் தொடர்பு எண் வேண்டும் என்று நெறியாளராக இருந்த முக்தாரிடம் கேட்டபோது, “நான் உங்களை விவாதத்திற்கு அழைக்க வில்லை. உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. உங்களை அழைத்த “ஜோஷ்வா” என்பவரிடம் கேளுங்கள்!” என்று புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு சொன்னார்.
இதுவரை மாலைமுரசு நிர்வாகம் எந்தவிதமான விளக்கமும் நடந்த நிகழ்வுகளுக்கு வருத்தமோ, ஊடக அறம் மீறி வெளிவந்த வீடியோ குறித்து விளக்கம் தராதது ஏன்? இது “திட்டமிட்ட செயல்” என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
இன்று இதைச் செய்த மாலைமுரசு நிர்வாகம் நாளை ஊடகத்தில் கருத்தாளர்களாக வரக்கூடிய ஆளுமைகளின் தனிப்பட்ட பேச்சுகளை கூட, தனிப்பட்ட செயல்களை கூட, திருட்டுத்தனமாக ஊடக அரங்கில் அல்லது ஊடக காத்திருப்பு அரங்கத்தில் நடக்கும் காட்சிகளை கூட வெளியிட வாய்ப்பு உருவாகலாம்.
இன்று இதைச் செய்தவர்கள் நாளை அதையும் செய்வார்கள்.
பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று இழிவுபடுத்தும் நோக்கில் பேசுவதை அனுமதிக்க நெறியாளர்கள் அதேபோல நாளை யாராவது ஒருவர் பிற சாதிகள் குறித்து ஊடகங்களில்
முஸ்லீம், கிறிஸ்துவர், நாடார், பறையர், அருந்ததியினர், தேவர், நாயக்கர் பிள்ளை, ……. இப்படி ஒவ்வொன்றையும் கிராமத்து பாணியில் பெயர் சொல்லி அழைக்க தொடங்குவார்கள். ஆனால் அதை கண்டிப்பார்களா?
ஆதரிப்பார்களா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.
“கோவில் யானை ” “சாக்கடை பன்றி”யை பார்த்து ஒதுங்கி சென்றது என்றால், பன்றியை பார்த்து கோவில் யானை பயந்து விட்டது என்பது அல்ல . அமைதி ஒருவகை வீரம்தான். விஷப் பால் கொடுத்த பூதகியின் நிலை. அழகு வேடம் பூண்ட
“சூர்ப்பனகை” நிலை – இது வரலாறு.
பெண்ணியவாதிகள் என்று சொல்லும் “சு.வ.” கோஷ்டிகளுக்கு நான் சொல்லும் செய்தி இதுதான் என்கிறார் காட்டத்துடன்!