காசி விஸ்வநாதர் கோயில் திறப்பு! மக்கள் மகிழ்ச்சி!

அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா சற்றுமுன்
kasi viswamithar temple - 2026

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டிருந்த காசிவிசுவநாதர் கோவில் இன்று மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ள அறிவிப்பின்படி புதிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் பக்தர்கள் காசி விசுவநாதர் கோவிலில் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சிவபெருமானுக்கு நீரால் மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுடன் இன்றுமுதல் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.