தொடர்ந்து 2வது முறையாக சிங்கப்பூர் முதலிடம்: உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில்!

உலகம்

singaporeசிங்கப்பூர்: உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 2வது முறையாக சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. பொருளாதார புலனாய்வுப் பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 93 நாடுகளில், 140 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகிலேயே செலவு மிகுந்த நகரம் என சிங்கப்பூர்தான் தெரிய வந்துள்ளது. பாரீஸ், ஓஸ்லோ, ஜூரிச், சிட்னி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த முறை நடத்தப்பட்ட ஆய்விலும் இதே இடங்களை இந்நகரங்கள் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.