சத்யம் கம்ப்யூட்டர் வழக்கு: ஏப்.9ல் தீர்ப்பு என சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு

Published:

ramalinga-raju-satyamஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர் வழக்கில் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்து, லாபத்தை மிகைப்படுத்தி காட்டிய விவகாரம் 2009 ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அதிபர் ராமலிங்க ராஜூ அவரது சகோதரர் ராமராஜூ உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தது. இவர்கள் மீது மோசடி, குற்ற சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைவரும் இப்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் குறித்த வழக்கு விசாரணை, ஹைதராபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த டிச. 23ல் விசாரணை நடந்து முடிந்து, மார்ச் 9ஆம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று நீதிபதி பி.வி.எல்.என். சக்கரவர்த்தி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img