பக்கா டேஸ்ட்.. தக்காளி வெல்லக் குழம்பு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
தக்காளி வெல்லம் குழம்பு
தக்காளி வெல்லம் குழம்பு

தக்காளி வெல்ல குழம்பு
தேவையான பொருட்கள்
நாட்டுத்தக்காளி – 500 கிராம்,
எண்ணெய் – 1½ டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 2,
உப்பு – தேவைக்கு,
காய்ந்தமிளகாய் – 3-4,
பொடித்த வெல்லம் – 1/2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
பருப்புப்பொடி – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

பருப்புப் பொடி…

கடாயில் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைத்துக் கொள்ளவும். காய்ந்தமிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பருப்புப் பொடி, தனியாத்தூள், சீரகத்தூள் கலந்து தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு தாளித்து, காய்ந்தமிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கி, பொடித்த பொடி, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு கரம்மசாலாத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, வெல்லத்துருவல், 250 மி.லி. தண்ணீர் ஊற்றி கலந்து, நன்கு வேகவிட்டு மசித்து இறக்கவும். புளிப்பு, காரம், இனிப்பு கலந்த குழம்பை இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.