பஹ்ரைனில்… ‘தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவன்’ என்று சொன்னவருக்கு மோடி அளித்த பதில்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
modi in france1 - 2026

பாரதப் பிரதமர் மோடி, மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்றுடன் அவரது ஜி7 மாநாட்டுக்கான ஐரோப்பிய சுற்றுப் பயணம் நிறைவுறுகிறது.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் – யுஏஇ மற்றும், இஸ்லாமிய நாடான பஹ்ரைனுக்கு அரசு முறை பயணம் செய்தார் பாரதப் பிரதமர் மோடி. அவருக்கு இரு நாடுகளிலும், அந்நாடுகளின் மிக உயரிய விருது அளிக்கப் பட்டு, மோடி கௌரவிக்கப் பட்டார்.

இரு நாடுகளிலும், இந்திய சமூகத்தவரிடம் கலந்துரையாடினார் பிரதமர் மோடி அதற்கு முன்பாக, பஹ்ரைனில் இந்திய சமூகத்தினரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார். அப்போது பிரதமரை வரவேற்க வரிசையில் நின்றிருந்த ஒருவர், தாம் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவர் என்று பிரதமர் மோடியிடம் அறிமுகம் செய்து கொள்கிறார்.

அதற்கு பிரதமர் மோடி உடனே புன்முறுவல் பூத்தபடி, வாவ்… வணக்கம்… என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியபடி, அவருடன் கைகுலுக்குகிறார். அதனைக் கண்டு மகிழ்ந்த அந்தத் தமிழர், அவரிடம் வணக்கம். நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறார்.

இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.