பார்சலில் வந்த பாம்பு ! பரபரப்பும் பதட்டமும்…!

Published:

snake 1 - 2026

ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் வேலை காரணமாக ஒடிசாவில் மயூர்பன்ச் மாவட்டத்தில் ராஜரங்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு கூரியர் மூலமாக ஒரு பார்சல் வந்துள்ளது.

கூரியர் பார்சலை திறந்தார் முத்துக்குமரன். உடனே பெரும் அதிர்ச்சி அடைந்து பதட்டத்துடன் பார்சலை கிழே போட்டுவிட்டார்.. அப்போது பார்சலில் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்தது.. உடனடியாக, அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, வனத்துறையினர் வந்து பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுவிட்டனர்.

snake - 2026

முத்துக்குமரன் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை டெலிவரி செய்ய, குண்டூரில் கடந்த 9ம் தேதி தனியார் கூரியர் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார். அதன்படி, கூரியரில் வந்த பார்சலை திறந்து பார்க்கும் போது அதில் பொருட்களுடன் இருந்த பாம்பை கண்டதும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து கூரியர் நிறுவனத்திடம், தான் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img