
ஜம்முவின் தோடா, கிஸ்துவார், ராம்பான், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த செல்போன் சேவை மீண்டும் தொடங்கியது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப் பிரிவு 370 திரும்பப் பெறப் பட்டதை அடுத்து, ஆக.5 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்போன், மொபைல் இண்டெர்நெட் சேவை இன்று முதல் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஜம்முவுக்கு உட்பட்ட தோடா, கிஷ்துவார், ராம்பான், ரஜவுரி, பூஞ்ச் ஆகிய 5 மாவட்டங்களில் மீண்டும் மொபைல் போன் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. நிலை படிப்படியாக சீர் அடைந்து வருவதாகவும், ஜம்முவில் முழு அமைதி நிலவுவதாகவும் கூறப் பட்டுள்ளது.



