ஆண்களின் வக்கிர புத்தியைச் சாடிய சின்மயி!

சற்றுமுன் சினிமா
chinmayee
chinmayee

சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பவராகவும் சின்மயி உள்ளார். வேலைக்குச் செல்லும் இடங்களில் பெண்கள் கஷ்டப்படுவதை அவரிடம் பகிர்ந்து வருகின்றனர்.

அடிப்படையில் பாடகியான சின்மயி அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நேரலையில் ரசிகர்களுக்கு பேட்டி கொடுப்பார். இதை இப்போது எல்லா பிரபலங்களும் செய்யத் தொடங்கி விட்டனர்.

அப்படி சமீபத்தில் சின்மயி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் பேட்டி அளித்துள்ளார். அந்த நேரத்தில் ரசிகர் ஒருவர் எதிர்பாராதவிதமாக சின்மயிடம், ஜிப்பை கழட்டுமாறு கேட்டுள்ளார்.

chinmaye
chinmaye

சும்மாவே இந்த மாதிரி பேசும் ஆண்களை விட மாட்டார் சின்மயி. அப்படி இருக்கையில் நேரலையில் கேவலமாக பேசினால் விட்டு விடுவாரா. தன்னுடைய பங்கிற்கு அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, என்னைப் போன்ற பிரபலத்திடமே இந்த மாதிரி பேசுகிறார் என்றால் சாதாரண பெண்கள் பாவம்தான், இப்படி பண்ணினால் பெண்ணியத்தை எப்படி எதிர்பார்ப்பது என வெளுத்து வாங்கியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.