திருவண்ணாமலை மஹாதீபம்: 1,000 மீட்டர் காடா திரிக்கு சிறப்பு பூஜை!

Published:

thiruvanamalai
thiruvanamalai

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 1,000 மீட்டர் காடா திரிக்கு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களான இறைவன், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில் நாளை அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. ‘

அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.

மஹா தீபம் ஏற்ற பயன்படும் கொப்பரை இன்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் தயார் நிலையில் உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்த உள்ள 1,000 மீட்டர் காடா துணியிலான திரி தயார் செய்யப்பட்டு நேற்று சிறப்பு பூஜை செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று மதியம் 1:00 மணி முதல் வரும் 20ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img