
பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தேசிய புலனாய்வு முகமை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தகவலின்படி பெங்களூரு சென்ற தேசிய புலனாய்வு முகமை போலீசார், ஜோயிப் மன்னா என்பவரை கைது செய்தனர்.
இவர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்காக இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து துருக்கி வழியாக பல இளைஞர்களை சிரியாவுக்கு அனுப்பியதாகவும் தகவல் உள்ளது.
முன்னதாக, ஐ.எஸ்.அமைப்பிற்கு நிதி திரட்டியதாக பெங்களூருவில் அரிசி வியாபாரி இர்பான் நசீர், தமிழகத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் அகமது அப்துல் காதர், மருத்துவர் முகமது துக்கீர் மெஹபூப் ஆகியோரை என்ஐஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டில் உள்ளனர்.