
கொசு முட்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நொடிகளில் கொசு பல முட்டைகளை இடுவதை பார்க்கும்போது வியப்பில் விரியும் விழிகள் இமைக்க மறக்கின்றன.
ஒரு கொசு ஒரே நேரத்தில் 500 முட்டைகளுக்கு மேல் இடும்
கொசுக் கடித்தால் கொடிய நோய் (Mosquitos News) ஏற்படும் அபாயங்களால், பிரச்சனை என்றாலே, கொசுத்தொல்லை என்று சொல்லும் அளவுக்கு கொசுக்கள் மனிதர்களுக்கு பிரம்மாண்ட பிரச்சனையாய் உருவாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ரெபேக்கா ஹெர்பர்ட் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்து வைரலாக்குகின்றனர்.
பொதுவாக பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. கொசுக்களுக்கு ரத்தம் முதன்மையான உணவு இல்லை
ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபடும் பெண் கொசு, தனது முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே ரத்தத்தைக் குடிக்கிறது. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப ரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறதாம்!
இதற்காகவே, பெண் கொசுக்கள் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கிற இடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் நீரில் முட்டையிட்டு இனப் பெருக்கம் (Mosquito video) செய்யகின்றன.
கொசுக்களை நாம் தொடர்ந்து அடித்துக் கொன்றுக் கொண்டிருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை இவ்வளவு வேகமாக எப்படி அதிகரிக்கிறது என்ற கேள்வியை நாம் அடிக்கடி கேட்கிறோம்.
தற்போது, கொசுக்கள் முட்டையிடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இந்த வீடியோவைப் பார்த்தால் ஆச்சரியம் மட்டுமல்ல, கொசுக்களின் அதீத அதிகரிப்புக்கு காரணமும் புரியும். கொசு ஒரே நேரத்தில் 500 முட்டைகளுக்கு மேல் இடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
12 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பெண் கொசு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே ஆண் கொசுவுடன் உறவு கொள்கிறதாம். ஒரு நேரத்தில் 200 முதல் 500 முட்டைகள் இடும் பெண் கொசுக்களின் ஆயுளும் அதிகம் தான்.
ஆண் கொசுக்களின் வாழ்நாள் 10 நாட்கள் மட்டுமே என்றால், பெண் கொசுக்களின் ஆயுள் 40 முதல் 50 நாட்கள் ஆகும். கொசுக்கடியால் மனிதர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன.
“https://t.co/TVxorCe29N”>pic.twitter.com/TVxorCe29N
— Rebecca Herbert (@RebeccaH2030) <a href=”https://twitter.com/RebeccaH2030/status/1440649579142291456?