ஏமாறாதீர்கள்: எச்சரிக்கும் SBI!

சற்றுமுன் தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு
SBI bank atm
SBI bank atm

கொரோனா வைரஸ் பரவல் மக்களின் வாழ்க்கை முறையை கிட்டதட்ட அடியோடு மாற்றிவிட்டது. ஏராளமானோர் வாழ்வாதாரம் இழந்தனர், வேலைவாய்ப்புகளை இழந்தனர்.

மேலும், புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால் பலரும் கடன் பெற்று நெருக்கடிக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றனர்.

ஐடி நிறுவனங்கள், வங்கிகள் என பல துறை சார்ந்த நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றன. இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில மோசடி கும்பல்கள் வேலை தேடுவோரை ஏமாற்றி வருகின்ற மோசமான சம்பவங்களும் நடக்கின்றன.

இதுகுறித்து இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கே புகார்கள் குவிந்துள்ளன. வேலை தேடுவோர்களை குறிவைத்து எஸ்பிஐ வங்கி நிர்வாகம் என்ற பேரில் சில மோசடி கும்பல்கள் போலி appointment letter கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

பல போலி இணையதளங்கள் மூலம் மோசடி கும்பல்கள் இச்செயலை செய்து வருகின்றன. இந்நிலையில், எஸ்பிஐ பேரில் போலியாக வழங்கப்படும் appointment letter குறித்து வேலை தேடுவோருக்கு எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.

வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பட்டியலிடப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் வெளியிடுவதில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு, இண்டர்வியூ, இறுதி ரிசல்ட் உள்ளிட்ட விவரங்களை https://www.sbi.co.in/web/careers , https://bank.sbi/web/careers ஆகிய இணையதளங்களில் மட்டும் பார்த்து தெரிந்துகொள்ளும்படி எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.