
முருங்கைப்பூ வடை
தேவையான பொருட்கள்:
முருங்கைப்பூ – 1 கப்,
துவரம் பருப்பு – 1/2 கப்,
கடலை பருப்பு – 11/2 கப்,
காய்ந்த மிளகாய் – 4,
மஞ்சள் தூள் – சிறிது,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தயிர் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை விளக்கம்:
முருங்கைப்பூவை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்த தண்ணீரில் போட்டு வைக்கவும். சிறிது நேரத்திற்குப் பிறகு அதை வடித்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஊறவைத்து, பின்னர் நீர் முழுவதும் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து கரகரப்பாக கெட்டியாக மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கி வைத்த முருங்கைப் பூவைப் போட்டு, தயிர் சிறிது சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதில் நீங்கள் விருப்பப்பட்டால் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றால் விட்டு விடலாம். இப்போது சின்ன சின்ன வடைகளாக தட்டி சூடாக இருக்கும் எண்ணெயில் இருபுறமும் திருப்பி திருப்பி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.



