பாரா ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய வீரர்கள்!

உலகம் விளையாட்டு
india in paralympics
india in paralympics

டோக்கியோ பாராஒலிம்பிக் (3 செப் 2021) ஆட்டங்களும் முடிவுகளும்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

டோக்கியோவில் நடைபெறும் பாராஒலிம்பிக் போட்டிகளில் நேற்று இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதக்கங்கள் பெற்றது.

T64 பிரிவு உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ப்ரவீண் குமார் 2.1 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

அவனி லேக்கரா 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வெண்றார். இவர் ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். எனவே இது இவருக்கு இரண்டாவது பாராஒலிம்பிக் பதக்கம். இந்தச் சாதனையைச் செய்யும் முதம் இந்தியப் பெண் வீராங்கனை இவர்; நான்காவது இந்திய வீரர். இதற்கு முன்னர் ஜோகிந்தர் சிங் பேடி, மாரியப்பன் தங்கவேலு, தேவேந்திர ஜஜாரியா ஆகிய இரண்டு பதக்கங்கள் பெற்ற வீரர்கள்.

ஹர்வீந்தர் சிங் வில்வித்தைப் போட்டியில் கொரிய நாட்டைச் சேர்ந்த வீரரை ஐந்து செட் விளையாடி சமன் செய்தார். பின்னர் ஒரு ஃபைனல் ஷூட் ஆஃப் போட்டி நடந்தது. அதில் ஹர்வீந்தர் 10 புள்ளிகள் எடுத்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.