தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் பணி!

தமிழகம் வேலைவாய்ப்பு
job - 2026

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் (TIIC) காலியாக உள்ள மேலாளர், மூத்த அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக், எம்.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ரூ.57 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC)
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : 50
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
Manager (Finance) – 04
Manager (Legal) – 02
Senior Officer (Technical) – 08
Senior Officer (Finance) – 27
Senior Officer (Legal) – 09
கல்வித் தகுதி :
Manager – CA, ICWA, முதுநிலைப் பட்டம், MBA, M.A, M.Sc, M.Com, சட்டம் தேர்ச்சி பெற்று 5 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Officer – B.E, B.Tech, AMIE, B.L, பட்டம், CA, ICWA, முதுநிலைப் பட்டம், MBA, M.A, M.Sc, M.Com தேர்ச்சி பெற்று 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 43 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,80,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/tiiclmsfeb21/ எனும் இணையதளத்தின் மூலம் 14.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
BC, MBC, MBC&DNC, General & DAP விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000
SC, SCA, ST விண்ணப்பதாரர்கள் – ரூ.500
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் இடம் :
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மையங்களில் இத்தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற விரும்புவோர் www.tiic.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை
காணவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.