மதுரை முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை நிவேதனம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai mukkurini vinayakar2
madurai mukkurini vinayakar2

மதுரையில் முக்குறுணி விநாயகருக்கு மிகப் பெரும் அளவிலான கொழுக்கட்டை நிவேதனம் செய்யப் பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை யொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை முக்குறுணி விநாயகருக்கு படைக்கப்பட்டது.

madurai mukkurini vinayakar
madurai mukkurini vinayakar

முன்னதாக, பக்தர்கள் இன்றி, முக்குறுணி விநாயகருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேக,  அலங்காரத்தை சிவாச்சாரியார்கள் செய்தனர்.இதையடுத்து, 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டையை, கோயில் பணியாளர்கள் சுமந்து வந்து விநாயகருக்கு படைத்தனர்.

ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழாவானது, வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.கொரோனா காலம், என்பதால் பக்தர்கள் இன்றி நடைபெற்ற விழாவாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.