Homeஅடடே... அப்படியா?குமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம்! மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்!

குமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம்! மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்!

kanyakumari vivekanandarock - Dhinasari Tamil
  • #குமரி_சற்றுமுன்_பரபரப்பு :
  • கன்னியாகுமரி விவேகானந்தா ராக் போகுற பாதையில் மீனவர்கள் ஒய்வெடுக்கும் கட்டிடத்தை திடிரென இடித்து பெரிய சர்சு கட்டுவதாக பரபரப்பு
  • கடற்கரையின் இயற்கை அழகையும் விவேகானந்தா ராக்கையும் மறைக்கும் இந்த பெரிய சர்ச் கட்டுவதற்கு பெரும் தொகையை லஞ்சமாக வாங்கியதுயார் , அனுமதி கொடுத்தது யார் என்று பொதுமக்கள் மத்தியிலும் , சுற்றுலா பயணிகளிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • வாய்மூடி கிடக்கும் நகரிய அதிகாரிகள்
  • கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்
  • உஷாராகுமா இயற்கை பாதுகாவலர் சங்கம்…!
- Advertisement -
- Advertisement -

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம், கடலுக்குள் பாறைப் பகுதியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை என சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கட்டடங்கள் உள்ளன.

vivekanandarock - Dhinasari Tamil

மேலும், சுற்றுலாவுக்கு உரிய அம்சங்களான முக்கடல் சங்கமம், சூரிய உதயம், சூரிய அஸ்தமனக் காட்சிகள் இவை எல்லாம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தவை. இப்படி , குமரியில் ஏராளமான அம்சங்கள் இருப்பதால், தமிழக சுற்றுலாத் துறைக்கு பெருமளவிலான வருமானம் சுற்றுலா மூலமே வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருமானம் பெருகக் காரணமானவை இவைதான்!

இந்நிலையில் கன்னியாகுமரி விவேகானந்தா நினைவுப் பாறைக்கு செல்லும் பாதையில் மீனவர்கள் ஒய்வெடுப்பதற்காக அரசு இலவசமாகக் கட்டிக்கொடுத்த கட்டடத்தை திடிரென இடித்து, மீனவர்கள் பெயரில் பெரிய சர்சு கட்டுவதற்கான முயற்சிகள் அங்கே மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இதனால் கடற்கரையின் இயற்கை அழகையும் விவேகானந்தா பாறை, வள்ளுவர் சிலை ஆகியவற்றை மறைக்கும் முயற்சிகளை கிறிஸ்துவ அமைப்புகள் மேற்கொண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது.

ஏற்கெனவே, விவேகானந்தர் மண்டபம் செல்லும் பாறைக்கான படகுப் போக்குவரத்து முழுவதும் கிறிஸ்துவ சர்ச்சுகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மீனவர்களின் கையில் உள்ளது. அங்கே அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற சூழல் நிலவுகிறது. அவ்வப்போது முக்கிய நாட்களில், சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் புண்ணிய தினங்களில், படகு ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் இறங்குவர் அல்லது முரண்டு பிடிப்பர். இதனால் சுற்றுலா பயணிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில் இவ்வாறு, மீனவர்களுக்குக் கொடுத்த அரசு இலவசக் கட்டடத்தை இடித்து சர்ச் கட்டுமளவுக்கு என்ன சதி இங்கே நடக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றனர் பலர்

இந்த சட்டவிரோத செயலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..? மேலும் இதற்கு அனுமதி கொடுத்தது யார் என்று பொதுமக்கள் மத்தியிலும் , சுற்றுலா பயணிகளிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கவனிப்பார்களா? என்று கேள்வி எழுப்பும் சுற்றுலா பயணிகள், மாவட்ட நிர்வாகம் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதனிடையே, இது குறித்து உயர் நீதிமன்றத்தில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இந்து இயக்கங்கள் சார்பில் உடனடி நிறுத்த நடவடிக்கை குறித்து கோடி, வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள்..!

- Advertisement -

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,080FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,945FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

அகண்டா: ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி...

Ak: என்ன செஞ்சாலும் வைரல் தான்!

பொங்கல் ரிலீசாக ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் வலிமை...

குடும்பத்தோடு பொங்கல்.. புன்னகை இளவரசி கூறிய வாழ்த்து!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து...

Latest News : Read Now...